ADDED : ஜன 19, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் நந்தகுமார், 27.
இவர், நேற்று முன்தினம் இரவு, நண்பர் அஜய், 28, என்பவருடன், திருமங்கலத்தில் உள்ள 'கொரா புட்ஸ்' வளாகத்திலுள்ள உணவகத்தில், 'சிக்கன் பிரியாணி' சாப்பிட்டுள்ளார்.
அங்கேயே, இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்ட போது, அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும், உணவகத்தின் மீது, திருமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

