ADDED : ஜன 24, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், 26 முதல் 28ம் தேதி வரை, பராமரிப்பு பணி நடைபெறுவதால் உற்பத்தி நிறுத்தப்படும்.
மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவெற்றியூர், படேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு, புழல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படும்.
அவசர தேவைக்கு, https://cmwssb.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக முன்பதிவு செய்து, லாரி குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்.

