/
புகார் பெட்டி
/
சென்னை
/
உடைந்த குப்பை தொட்டி அகற்றி புதிதாக அமைக்கப்படுமா?
/
உடைந்த குப்பை தொட்டி அகற்றி புதிதாக அமைக்கப்படுமா?
உடைந்த குப்பை தொட்டி அகற்றி புதிதாக அமைக்கப்படுமா?
உடைந்த குப்பை தொட்டி அகற்றி புதிதாக அமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 26, 2025 11:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம் மண்டலம் சிந்தாதிரிப்பேட்டையில், நைனியப்பன் தெரு உள்ளது. இங்கு வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றும் குப்பை கழிவுகளை கொட்ட, இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இதில் ஒரு தொட்டி, உரிய பராமரிப்பு இல்லாததால் மிகவும் சிதிலமடைந்து கவிழ்ந்து கிடக்கிறது. இதனால், சாலையோரம் குப்பை கொட்டும் நிலை ஏற்படுகிறது. அவற்றை, கால்நடைகள் கிளறுவதால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உபயோகமற்ற குப்பை தொட்டியை அகற்றி, புதிதாக தொட்டி அமைக்க வேண்டும்.