/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெக்கானிக்கிடம் வழிப்பறி வாலிபர் கைது
/
மெக்கானிக்கிடம் வழிப்பறி வாலிபர் கைது
ADDED : செப் 26, 2025 12:39 AM
சென்னை'ஏசி' மெக்கானிக்கை வழிமறித்து, கத்திமுனையில் தாக்கி, 'ப்ளூ டூத்' கருவியை பறித்துச் சென்ற வாலிபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவல்லிக்கேணி, நீலம் பாஷா தெருவைச் சேர்ந்தவர் அப்துல் உசைன், 19; ஏசி மெக்கானிக். சில தினங்களுக்கு முன், டாக்டர் பெசன்ட் சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, அவரை வழிமறித்த மர்மநபர், பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மர்மநபர், கத்திமுனையில் அப்துல் உசைனை தாக்கி, கழுத்தில் மாட்டியிருந்த 'ப்ளூ டூத்' கருவியை பறித்துச் சென்றார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மெரினா போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரிஸ்வான், 28, என்பவரை நேற்று கைது செய்தனர்.