ADDED : ஜூன் 23, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், 20 இடங்களில், ஹிந்து முன்னணி சார்பில் ஹிந்து சாம்ராஜ்ய தின விழா நடந்தது.
அன்னுார், ஓதிமலை சாலையில், ஆட்டோ ஸ்டாண்டில், ஹிந்து முன்னணி சார்பில், ஹிந்துசாம்ராஜ்ய தின விழா நடந்தது.
விழாவில், கோவை வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தி, கொடியேற்றி, வீரசிவாஜி முடி சூட்டியது, ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவியது குறித்து பேசினார்.
ஹிந்து முன்னணி ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். கஞ்சப்பள்ளி, அக்கரை செங்கப்பள்ளி உள்பட 20 இடங்களில் கொடியேற்றி ஹிந்து சாம்ராஜ்ய தின விழா நேற்று நடந்தது.