/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
108 வயது மூதாட்டி மரணம்; உறவினர், ஊர் மக்கள் அஞ்சலி
/
108 வயது மூதாட்டி மரணம்; உறவினர், ஊர் மக்கள் அஞ்சலி
108 வயது மூதாட்டி மரணம்; உறவினர், ஊர் மக்கள் அஞ்சலி
108 வயது மூதாட்டி மரணம்; உறவினர், ஊர் மக்கள் அஞ்சலி
ADDED : ஜூன் 24, 2025 10:50 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே மரணமடைந்த, 108 வயது மூதாட்டிக்கு உறவினர்கள், ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே எருமாடு, மானுார் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர் பன்னீர்செல்வம். இவரின் தாயார் அழகம்மா,108. இவர் கடந்த தேர்தல் வரை ஓட்டளித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளார். கடந்த வாரம் வரை, யாருடைய துணையும் இன்றி நடந்து சென்று வந்தார்.
ஐந்து நாட்களாக உடல் நலக்குறைவால் படுக்கையில் இருந்த இவர் நேற்று உயிரிழந்தார். ஐந்து தலைமுறைகளை கண்ட மூதாட்டி அழகம்மா உடலுக்கு அவரின் பிள்ளைகள், உறவினர்கள், பேரன்கள் மற்றும் கொள்ளு பேர குழந்தைகள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.