/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
22,000 குடும்பங்களுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ்
/
22,000 குடும்பங்களுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ்
ADDED : ஜன 20, 2024 08:37 PM
அன்னுார்;அன்னுார் ஒன்றியத்தில், 22 ஆயிரம் குடும்பங்களுக்கு, அயோத்தி கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை நடக்கிறது. அன்னுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், வீடு, வீடாக, அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட அட்சதை, ராமர் படம் மற்றும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் திருமூர்த்தி, பொதுச்செயலாளர் முருகேசன் பங்கேற்றனர். தெற்கு ஒன்றியத்தில், ஒன்றிய தலைவர் ரத்தினசாமி தலைமையில் கணேசபுரம், காட்டம்பட்டி, வடவள்ளி பகுதியில் வீடு வீடாக கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
நிர்வாகிகள் கூறுகையில், 'அன்னூர் ஒன்றியத்தில் 22 ஆயிரம் குடும்பங்களுக்கு இதுவரை அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளன' என்றனர்.

