/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
23 ஜோடிகளுக்கு மத நல்லிணக்க திருமணம்
/
23 ஜோடிகளுக்கு மத நல்லிணக்க திருமணம்
ADDED : பிப் 01, 2024 11:14 PM
போத்தனுார்:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவை முன்னிட்டு, ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த, 23 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், 75ம் ஆண்டை முன்னிட்டு, அகில இந்திய கேரளா முஸ்லிம் கலாசார மையம் சார்பில், குனியமுத்தூர், புட்டுவிக்கி சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், 23 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். மதியம் சைவ, அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான், கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன் கூறியதாவது:
கட்சியின், 75ம் ஆண்டை முன்னிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த, 75 பெண்களுக்கு மத நல்லிணக்க திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.
சென்னையில், 17, திருச்சியில் 25, கோவையில் 23 ஜோடிகளுக்கு திருமணம் அவரவர் மதம் சார்ந்த சடங்குகளை நடத்தி, நடத்தப்பட்டுள்ளது. ஆத்ம தாஸ்யாமி தர்மபக் ஷா, பேராயர் பால் நட்ராஜ், ஜனாப் ஷம்சுதீன் அபூபக்கர் இதனை நடத்தினர்.
திருமண ஜோடிகளுக்கு தலா, 10 கிராம் தங்கம், 1.75 லட்சம் மதிப்பிலான பீரோ, கட்டில் உள்ளிட்ட வீட்டு சாமான்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

