/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மருத்துவமனையில் கருத்தரங்கு
/
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மருத்துவமனையில் கருத்தரங்கு
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மருத்துவமனையில் கருத்தரங்கு
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மருத்துவமனையில் கருத்தரங்கு
ADDED : ஜன 23, 2024 01:52 AM
கோவை;ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின், அவசர சிகிச்சைப்பிரிவுசார்பில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்குநடந்தது.
மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்களின் பங்கு குறித்து விளக்கினர்.
அவசர சிகிச்சை பிரிவு ஆலோசகர் டாக்டர் மஞ்சுநாதன், விபத்தில் ஆரம்ப கால நிலையை கையாளும் முறை பற்றியும், நோயாளிகளின் மருத்துவ உதவி தேவையின் அவசரத்திற்கு ஏற்பவரிசைப்படுத்துதல் பற்றியும்ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விளக்கினார்.
அவசர சிகிச்சை பிரிவு ஆலோசகர் டாக்டர் பார்த்திபன், கோல்டன் ஹவரில் உடனடி மருத்துவ உதவியின் அவசியும், அடிப்படை உயிர்காக்கும் நுட்பங்கள் குறித்து பேசினார்.கோவையை சேர்ந்த, 70 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கருத்தரங்கில்கலந்து கொண்டனர்.