/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரிய வாலிபர்
/
சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரிய வாலிபர்
ADDED : ஜன 21, 2024 01:32 AM
கோவை:சட்ட விரோதமாக கோவையில் தங்கி இருந்த நைஜீரிய வாலிபர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று அவரிடம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
ஆவணங்களை பரிசோதித்த போது, விசா காலாவதியாகி இருந்ததும், இம்மானுவேல், 38 என்பதும் மும்பையில் தங்கியிருந்து பனியன் வியாபாரம் செய்து வந்து, வேலை விஷயமாக திருப்பூர் வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததும் தெரிந்தது.
போலீசார், சட்ட விரோதமாக தங்கி இருந்த இவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

