/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசு இல்லாத உலகம்: உலக சாதனை நிகழ்வு
/
மாசு இல்லாத உலகம்: உலக சாதனை நிகழ்வு
ADDED : ஜன 20, 2024 08:38 PM
கோவை;'மாசு இல்லாத உலகம்' எனும் தலைப்பில், உலக சாதனை நிகழ்ச்சி, கோவை அவினாசிலிங்கம் பல்கலையில், நேற்று நடந்தது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் இன்ஜினியர் (வடக்கு) ரவிச்சந்திரன் பேசுகையில், ''நெகிழியைப் பயன்படுத்தும் போது பஞ்சபூதங்கள் அனைத்தும் அவற்றின் நிலையிலிருந்து மாறி இயற்கைக்கு முரணான நிகழ்வுகள் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகிறது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டம் கொண்டு வரப்பட்டது. பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியப் பின் அதை எரிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் சோடியம் குளோரைடால், காற்று மாசுபடுவதோடு மனிதர்களும் பிற உயிரினங்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். மீண்டும் மஞ்சப்பை என்பதை உங்களிடமிருந்து துவங்க வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, 3,000, மாணவியர் இரண்டரை மணி நேரம், 'தமிழகம் 2024' மற்றும் மஞ்சப்பை லோகோ, 'நோ பிளாஸ்டிக்' ஆகிய எழுத்துக்கள் வடிவில் அமர்ந்து உலக சாதனை நிகழ்வை ஏற்படுத்தினர்.
திருக்குறள் எழுதுதல் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா வரவேற்றார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை சுற்றுச்சூழல் இன்ஜினியர் நளினி, அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் பாரதிஹரிசங்கர், பதிவாளர் கவுசல்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

