/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லிப்ட் ரோப் அறுந்து பெண் தொழிலாளி பரிதாப பலி
/
லிப்ட் ரோப் அறுந்து பெண் தொழிலாளி பரிதாப பலி
ADDED : ஜன 14, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்;சுந்தராபுரம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் லதா, 45. அதே பகுதியை சேர்ந்தவர் குஷ்பு, 25. இருவரும் அங்குள்ள ஒரு வால்வு தயாரிக்கும் தொழிற்சாலையில், பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, பொருட்கள் எடுத்துச் செல்லும் லிப்டில் இருவரும் கீழே வருவதற்காக ஏறினர்.
எதிர்பாராவிதமாக லிப்ட் ரோப் துண்டானது. 25 அடி உயரத்திலிருந்து அதிவேகமாக கீழிறங்கிய லிப்ட் தரையில் மோதியது.
லதா சம்பவ இடத்திலேயே பலியானார். குஷ்பு சிறு காயத்துடன் தப்பினார். சுந்தராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

