/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வறண்ட வானிலை நிலவும் விவசாயிகளுக்கு அறிவுரை
/
வறண்ட வானிலை நிலவும் விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஜன 22, 2024 08:44 PM
பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தில், வறண்ட வானிலையை பயன்படுத்தி அறுவடை நிலையிலுள்ள பயிர்களை, உடனடியாக அறுவடை செய்து நன்கு உலர்த்தி சேமிக்க தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அறுவடை முடிந்த பிறகு, விவசாயிகள் நிலத்தினை கொத்து அல்லது சட்டி கலப்பை கொண்டு உடனடியாக உழுவதன் வாயிலாக, களைகளை கட்டுப்படுத்துவதுடன்; கோடைக்கால மழையின் ஈரப்பதத்தை சேமிக்கலாம். பயிர்கழிவுகளை எரிக்காமல், நிலத்தில் உழுவதால் பயிர் கழிவுகள் எளிதாக மட்கும்.
தற்போது நிலவும், வானிலையை பயன்படுத்தி முன் பருவ கரும்பு சாகுபடியை உடனடியாக மேற்கொள்வதன் வாயிலாக அதிக மகசூல் பெறலாம். மஞ்சளில் இலைக்கருகல் நோய் வரவாய்ப்பு உள்ளதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். நீர்பாசன வசதி உள்ள, இடங்களில் மட்டும் நெல் நடவை 'நீர் மறைய நீர் கட்டு' முறையுடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோமாரி நோய் வராமல் தடுக்க, வந்த இடத்தில் இருந்து பிற இடங்களுக்கு பரவாமல் தடுக்கவும், 200 கிராம் சோடியம் ஹைடிராக்சைடை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, மாட்டு கொட்டகைகள், மாடு கட்டும் இடங்களில், தெளிக்கவேண்டும்.

