/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வயதாகியும் அலைக்கழிக்கப்படும் ஒதுக்கீட்டாளர்கள்; வீட்டு விற்பனை பத்திரம் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு
/
வயதாகியும் அலைக்கழிக்கப்படும் ஒதுக்கீட்டாளர்கள்; வீட்டு விற்பனை பத்திரம் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு
வயதாகியும் அலைக்கழிக்கப்படும் ஒதுக்கீட்டாளர்கள்; வீட்டு விற்பனை பத்திரம் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு
வயதாகியும் அலைக்கழிக்கப்படும் ஒதுக்கீட்டாளர்கள்; வீட்டு விற்பனை பத்திரம் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு
ADDED : ஜன 19, 2024 04:30 AM
கோவை : இளமை காலத்தில் குடியிருப்பு வாங்கிய வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் பலர், 30 ஆண்டுகளை கடந்து முதுமையாகியும் வீட்டு பத்திரத்துக்காக அலைக்கழிக்கப்படுவதாக அதிருப்தி எழுந்துள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் பொருளாதாரத்தில் நலிவுற்றோர், நடுத்தர மற்றும் உயர்வருவாய் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கோவை வீட்டு வசதி வாரியத்தை பொறுத்தவரை கவுண்டம்பாளையம், கணபதி உள்ளிட்ட இடங்களில் இக்குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன.
அதேசமயம், முதுமை ஆகியும் நியாயமான விலையில் வீட்டுபத்திரம் என்பது கேள்விக்குறியாக இருப்பதாக ஒதுக்கீட்டாளர்கள் குமுறுகின்றனர். மேலும்,நீதிமன்ற தீர்ப்புகள் எதையும் ஏற்காமலும், இசைவு தீர்ப்பாய தீர்ப்புகளை நிறைவேற்றாமலும்கோவை வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும் புலம்பல்கள் எழுகின்றன.
கணபதி மாநகர் 3வது பிளாக் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
வீட்டு பத்திரம் உள்ளிட்ட விஷயங்களில் கடந்த, 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்புகள்எதையும் ஏற்காமல் கோவை வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் செயல்படுகின்றனர். அதேபோல், இசைவு தீர்ப்பாயத் தீர்புகளை மூன்று ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றாமல் உள்ளனர்.
கோவை வந்த தமிழக முதல்வர், 'மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயனில்லாத பதில்களை கூறுவதை ஏற்க முடியாது' என, தெரிவித்திருந்தார்.
ஆனால், முதல்வரின் உத்தரவுக்கு மாறாக இங்குள்ள அதிகாரிகளின் நடவடிக்கை உள்ளது.வாரிய பணத்தையும், நேரத்தையும் வீணடித்து, ஒதுக்கீட்டாளர்களையும் அலைக்கழிக்கின்றனர்; தங்களது அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.
முதுமையாகியும் கோவைமாவட்டத்தில் ஏராளமானோர் வீட்டு பத்திரத்துக்காக அலைகிறோம். எனவே, நியாயமான முறையில் விலை நிர்ணயம் செய்து வீட்டின் உரிமைப் பத்திரம் வழங்கி, 30 ஆண்டுகால பிரச்னைக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அமைச்சர் உத்தரவு!
கடந்த வாரம் கோவை வந்த வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி,நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் அமல்படுத்த ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இனியாவது, அமைச்சரின் உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவார்களா அல்லது காற்றில் பறக்க விடப்போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

