/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாள் முழுவதும் அன்னதான திட்டம் துவக்கம்
/
நாள் முழுவதும் அன்னதான திட்டம் துவக்கம்
ADDED : ஜன 23, 2024 01:43 AM
ஆனைமலை;ஆனைமலை அருகே, மாசாணியம்மன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர், 'காணொலி' வாயிலாக துவக்கி வைத்தார்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, அமாவாசை உள்ளிட்ட நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநில பக்தர்கள் அதிகளவு தரிசனம் செய்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தற்போது, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், இத்திட்டத்தை, 'காணொலி' வாயிலாக துவக்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், உதவி ஆணையர் விஜயலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமும், காலை, 10:00 மணி முதல், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது, என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

