/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி
/
முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி
ADDED : ஜன 19, 2024 12:04 AM

வால்பாறை : கருமலை நடுநிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
வால்பாறை அடுத்துள்ளது கருமலை எஸ்டேட். இங்குள்ள அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக ஒன்றிணைந்து, 'சிற்பிகளுக்காக சிலைகள் எடுக்கும் சந்தோஷ சங்கமம்' நிகழ்ச்சியை நடத்தினர்.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமலாடெய்சி தங்கம் தலைமை வகித்தார். முன்னாள் மாணவரும், சேலம் மாவட்ட நீதிபதி ஜெகன்நாதன், மருத்துவத்துறை மாவட்ட இணை இயக்குனர் (ஓய்வு) துரைகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

