/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்பூர் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு; மண்பானை தொழிலுக்கு வரி விதித்த தகவல்
/
திருப்பூர் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு; மண்பானை தொழிலுக்கு வரி விதித்த தகவல்
திருப்பூர் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு; மண்பானை தொழிலுக்கு வரி விதித்த தகவல்
திருப்பூர் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு; மண்பானை தொழிலுக்கு வரி விதித்த தகவல்
ADDED : ஜன 24, 2024 01:51 AM

திருப்பூர்;திருப்பூர் அருகே பரஞ்சேர்வழியிலுள்ள மத்தியபுரீஸ்வரர் கோவிலில், மண்ணில் புதைந்திருந்த, கி.பி., 11 மற்றும் 16ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் - பரஞ்சேர்வழியில், சுகந்த குந்தளாம்பிகை உடனமர் ஸ்ரீமத்தியபுரீஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரநாராயண பெருமாள் கோவில்கள் உள்ளன.திருப்பணி நடந்து வருவதால், பல்வேறு காலங்களில் உருவாக்கிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
இதனை ஆய்வு செய்த, வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ரவிக்குமார், பொன்னுசாமி ஆகியோர் கூறியதாவது:
அம்மன் சன்னதி முன், 220 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலம் உள்ள பெரிய கல்லில், கிரந்த எழுத்துக்களுடன் கல்வெட்டு கண்டறியப்பட்டது. முதல் பக்கத்தில், இரண்டு குத்துவிளக்கு, சூலம், சங்கு மற்றும் சந்திரன் பொறிக்கப்பட்டுள்ளன. இது, கி.பி., 11ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவருகிறது.
இந்திய வரலாற்று பேராசிரியர் சுப்பராயலு, கிரந்த எழுத்துக்களை வாசித்து பார்த்து, 'ஹர்ரிம், ஹஸ்த்தா, ஷாம், லம்' போன்ற சொற்களே அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.
இவ்வகை மந்திர கல்லை போற்றி வழிபட்டால், மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் நோயை குணப்படுத்தும் என்பது ஐதீகம்.
இதே கோவில் வளாகத்தில் உள்ள வீரநாராயணபெருமாள் கோவிலில் புதைந்த கல்லில், 80 செ.மீ., உயரம், 50 செ.மீ., அகலத்துடன் இருக்கும் தமிழ் கல்வெட்டில், வரலாற்று சிறப்பு மிகுந்த செய்தி அடங்கியுள்ளது.
விளம்பி ஆண்டு, மாசி மாதம், 18ம் தேதி, ஸ்ரீமான் கும்பள அண்ணார்கள், திம்மராசன் ஆட்சியில் இருந்த போது வரிவிதித்துள்ளனர்.
'கூத்தார் சுங்கம்' எனப்படும், மண்பானை செய்ய பயன்படும் சக்கரத்துக்கு வரி விதித்துள்ளனர். சந்திரன் உள்ளளவும், வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு தீபம் எரிக்க பயன்படுத்துவது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அக்காலகட்டத்தில், மண்பானை தொழில் சிறப்புற்று இருந்ததால், வரி விதிக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. இவ்வகை எழுத்து அமைப்பை பார்க்கும் போது, கி.பி., 16ம் நுாற்றாண்டில் உருவாக்கிய கல்வெட்டு என்பது தெரிய வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

