/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
66 பவுன் தங்கம் திருடிய ஊழியர்
/
66 பவுன் தங்கம் திருடிய ஊழியர்
ADDED : ஜன 23, 2024 01:50 AM
கோவை;கோவை கடைவீதி சாமி அய்யர் புது வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன், 30. இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் சலீவன் வீதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், 30, என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு லிங்கேஸ்வரன் நகை பட்டறையை பூட்டி விட்டு, அதன் சாவியை கார்த்திகேயனிடம் கொடுக்காமல் வைத்திருந்தார்.
மறுநாள் அதிகாலை, நகை பட்டறைக்கு வந்த லிங்கேஸ்வரன், பட்டறையை திறந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.31.80 லட்சம் மதிப்புள்ள, 530 கிராம் (66 பவுன்) தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றார்.
காலை வழக்கம் போல கார்த்திகேயன் நகை பட்டறைக்கு வந்தபோது தங்கம் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைவீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் லிங்கேஸ்வரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

