/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுப்பு வீடுகளை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கணும் பயனாளிகள் எதிர்பார்ப்பு
/
தொகுப்பு வீடுகளை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கணும் பயனாளிகள் எதிர்பார்ப்பு
தொகுப்பு வீடுகளை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கணும் பயனாளிகள் எதிர்பார்ப்பு
தொகுப்பு வீடுகளை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கணும் பயனாளிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 18, 2024 10:18 PM
உடுமலை -தொகுப்பு வீடுகளை பராமரிப்பதற்கு, அரசின் நிதிஒதுக்கீடு குறைவாக இருப்பதால், பயனாளிகள் திட்டத்தில் பயன்பெற முடியாமல், சிதிலமடைந்த குடியிருப்புகளில் தவிக்கின்றனர்.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்தப்பட்ட 2018ம் ஆண்டுக்கு முன்பு வரை, மத்திய அரசின் சார்பில் தொகுப்பு வீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் இரண்டு அறைகள் கொண்ட சிமென்ட் மேற்கூரை அமைத்து குறிப்பிட்ட பகுதியில், வீடுகள் அமைக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்றனர்.
இத்திட்டத்தை தொடர்ந்து, அனைவருக்கும் வீடு திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.தற்போது, தொகுப்பு வீடு திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பலவும் சிதிலமடைந்து, பயனாளிகள் வீட்டை விட்டு வெளியேறும் நிலையும் உள்ளது.
இதனால், தொகுப்பு வீடுகளை பராமரிக்கவும், மக்களின் வாழ்விடத்துக்கு வழி செய்ய வேண்டுமென, திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில், தொகுப்பு வீடுகள் பராமரிக்க விருப்பமுள்ளவர்கள் பயன்பெறுவதற்கு அரசு அறிவித்தது. ஆனால் திட்டத்தில் பயன்பெற முடியாமல் பயனாளிகள் அவதிப்படுகின்றனர்.
பராமரிப்பு பணிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அரசு நிதி ஒதுக்குகிறது. உடுமலையில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. அவற்றில் 50 சதவீதம் சிதிலமடைந்த நிலையில் உள்ளன.
சிறிய மேற்கூரை சரிசெய்வதற்கு கூட அரசின் நிதி பற்றாக்குறையாக இருப்பதால், பயனாளிகள் தொடர்ந்து பழுதடைந்த குடியிருப்பில் வாழ்க்கையை நடத்துகின்றனர்.
முழுமையாகவே இடித்து விட்டு, புதிதாக கட்டும் வகையில் பெரும்பான்மையான வீடுகள் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அரசின் நிதியை பெற்றும் பயனில்லை என, பயனாளிகள் வேதனையுடன் உள்ளனர்.
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது வீடுகள் இடிந்து விட்டால், மீண்டும் வாழ்விடம் இல்லாமல் போய்விடும் என, பயனாளிகள் அச்சப்படுகின்றனர்.
தொகுப்பு வீடுகளை பாதுகாப்பான வாழ்விடமாக மாற்றுவதற்கு, முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, அரசு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

