/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கணும்! தெற்கு ரயில்வே மேலாளருக்கு மனு
/
பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கணும்! தெற்கு ரயில்வே மேலாளருக்கு மனு
பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கணும்! தெற்கு ரயில்வே மேலாளருக்கு மனு
பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கணும்! தெற்கு ரயில்வே மேலாளருக்கு மனு
ADDED : ஜன 19, 2024 12:09 AM
பொள்ளாச்சி : 'கோவை - கே.எஸ்.ஆர்., மற்றும் பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயில்களை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்,' என, தெற்கு ரயில்வே மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், தெற்கு ரயில்வே மேலாளருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்களைக் கொண்ட மையமாக பெங்களூரு உள்ளது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை மற்றும் பழநி பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான தனியார் துறை வல்லுநர்கள், பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றுகின்றனர்.குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் பணியில் உள்ளனர்.
இவர்கள், பொள்ளாச்சி, உடுமலை, பழநியில் இருந்து பெங்களூருக்கு அவ்வப்போது (குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு முறையாவது) பயணம் செய்கின்றனர். பெங்களூரு, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லுாரிகளில், இப்பகுதி மாணவர்கள் படிக்கின்றனர். ஏராளமான வர்த்தகர்கள், வணிகர்களும், வணிக காரணங்களுக்காகவும், மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் பெங்களூரு செல்கின்றனர்.
கர்நாடகாவின் பிற பகுதிகளான தார்வாட், ஹூப்ளி, ஹம்பி, சிவமோகா, குல்பர்கா, பெல்லாரி போன்ற இடங்களுக்கு ரயில்களில் செல்கின்றனர்.
பழநி, பொள்ளாச்சி, உடுமலை பகுதி மக்கள், கோவை, திருப்பூர், திண்டுக்கல் போன்ற இடங்களுக்கு சென்று, அங்கு இருந்து ரயில்களில் பெங்களூருக்கு செல்கின்றனர்.
இதுவரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி பகுதிகளிலிருந்து பெங்களூருக்கு நேரடி ரயில் சேவை இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். ரயில் வசதியில்லாததால், பொள்ளாச்சி, உடுமலை, பழநி பகுதி மக்கள் பெங்களூரு செல்ல பஸ்களையே நம்பியுள்ளனர்.
எனவே, -கே.எஸ்.ஆர்., மற்றும் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை (22666/ 22665) பொள்ளாச்சி, பழநி (கிணத்துக்கடவு வழியாக) நீட்டிக்க வேண்டும். கிணத்துக்கடவு வழியாக பழநியில் இருந்து உதய் 'டபுள்டக்கர்' எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், சாதாரண பெட்டிகளாக மாற்றி இயக்க வேண்டும்.
-கே.எஸ்.ஆர். மற்றும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில்கள், பொள்ளாச்சி அல்லது பழநிக்கு நீட்டிக்க வேண்டும். கர்நாடக மாநிலம் பெங்களூரு மக்கள், பொள்ளாச்சி, உடுமலை மற்றும் பழநி பகுதிகளில் உள்ள பல்வேறு சுற்றுலா, ஆன்மிக இடங்களுக்கு செல்ல பயனாகவும் இருக்கும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

