ADDED : அக் 20, 2025 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: பா.ஜ., கோவை புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அவிநாசி தொகுதிக்கு புதிதாக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தொகுதி அமைப்பாளராக வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, இணை அமைப்பாளராக கதிர்வேல், தொகுதி பொறுப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் ஜெகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., மாநிலத் தலைவர் நாகேந்திரன் இந்த நியமனத்தை அறிவித்துள்ளார். புதிய நிர்வாகிகளுக்கு பா.ஜ.,வினர் வாழ்த்து தெரி வித்தனர்.

