/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
6 வது நாளாக மாநகரில் வெடிகுண்டு சோதனை
/
6 வது நாளாக மாநகரில் வெடிகுண்டு சோதனை
ADDED : ஜன 19, 2024 04:19 AM
கோவை : அயோத்தியில் ராமர் கோவில் வருகிற, 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. அதேபோல, 21ம் தேதி கோவையில் பிரசித்தி பெற்ற கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. மேலும் குடியரசு தின விழாவிற்கான ஏற்படுகளும் நடந்து வருகிறது.
இந்த மூன்று நிகழ்வுகளையொட்டியும் வெடிகுண்டு நிபுணர்களின், 4 சிறப்புக் குழுக்கள் முக்கிய இடங்களில், 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “மாநகரில் முக்கிய இடங்களில், சோதனை நடத்த, 4 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜன., 13ம் தேதி துவங்கப்பட்ட இந்த சோதனை, 6வது நாளாக இன்று (நேற்று) தொடர்கிறது.
''இந்த சோதனை குடியரசு தினமான, 26ம் தேதி வரை நடக்கும். கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கார் குண்டு வெடித்ததில் இருந்து, முக்கிய நிகழ்வுகளின் போது கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது,” என்றனர்.

