/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போனஸ் கோரிக்கை நிராகரிப்பு: வழக்கு தொடர சங்கம் முடிவு
/
போனஸ் கோரிக்கை நிராகரிப்பு: வழக்கு தொடர சங்கம் முடிவு
போனஸ் கோரிக்கை நிராகரிப்பு: வழக்கு தொடர சங்கம் முடிவு
போனஸ் கோரிக்கை நிராகரிப்பு: வழக்கு தொடர சங்கம் முடிவு
ADDED : அக் 20, 2025 11:18 PM
கோவை: ரேஷன் பணியாளர்களின் போனஸ் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்ததால், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், நீதி மன்றத்தில் வழக்கு தொடர போவதாக, மாநில தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகைக்கு கூட்டுறவு ரேஷன்கடை பணியாளர்கள் அனைவருக்கும் சமமான போனஸ் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு நிறைவேற்றவில்லை.
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும், ரேஷன் பணியாளர்களை தமிழக அரசு வஞ்சிப்பது நியாயமில்லை. கூட்டுறவு சங்கங்கள் லாபமடைவதற்கும், நஷ்டம் அடைவதற்கும் பணியாளர்கள் பொறுப்பு இல்லை.
அதனால் அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான போனஸ், 20 சதவீதம் வழங்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கையை, தி.மு.க., அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இது சம்பந்தமாக, தமிழ்நாடு ரேஷன் கடைப்பணியாளர் சங்கம் சார்பில், நீதி மன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

