/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புனித ஜோசப் தேவாலயத்தில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
புனித ஜோசப் தேவாலயத்தில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
புனித ஜோசப் தேவாலயத்தில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
புனித ஜோசப் தேவாலயத்தில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜன 14, 2024 11:17 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் காட்டூர், புனித ஜோசப் தேவாலயத்தில், தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை, பாதிரியார்கள் ஷிபு நடுவில் பறம்பில், மணீஷ் முண்டுப்ளாக்கல் ஆகியோர் ஆடம்பர திருப்பலியை நிறைவேற்றினர். வரும் 19ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் திருவிழா திருப்பலிகள் நடைபெற உள்ளன. 20ம் தேதி காலை, புனித செபஸ்தியார் சொரூபம், அம்பு மந்திரித்தலின் ஆடம்பர திருப்பலியை, பாதிரியார்கள் பேபின் நீலங்காவில், ஆண்டனி சாலக்கல் ஆகியோர் நிறைவேற்ற உள்ளனர். அன்று மாலை, புனித அந்தோணியார் தேவாலயத்திலிருந்து, காட்டூர் புனித சூசையப்பர் தேவாலயத்துக்கு தேர்பவனி நடக்கவுள்ளது.
வரும் 21ம் தேதி ஆடம்பர தேர் திருவிழா திருப்பலியை, பாதிரியார்கள் ஆண்டனி கூட்டும்கல், சார்லஸ் சிறமேல் நிறைவேற்ற உள்ளனர். பாதிரியார் அகஸ்டின் சிரியங்கண்டத், நற்கருணை ஆசீர் வழங்க உள்ளனர். தொடர்ந்து, புனித சூசையப்பரின் ஆடம்பர தேர் பவனி நடக்கவுள்ளது.
வரும் 22ம் தேதி திருப்பலியை, பாதிரியார்கள் டோனி இளங்குந்நேல், பேன்ஜோ சிட்டாட்டுகரகாரன், ஜோன்ஸன் வலியபாடத் ஆகியோர் நிறைவேற்ற உள்ளனர். தேர் திருவிழா ஏற்பாடுகளை பாதிரியார், பங்கு மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

