/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் நிறுத்தப்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
/
பஸ் நிறுத்தப்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
பஸ் நிறுத்தப்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
பஸ் நிறுத்தப்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : ஜன 23, 2024 01:10 AM

பொள்ளாச்சி:தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, பழைய பஸ் ஸ்டாண்ட் பஸ் நிறுத்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதுபோன்று மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மக்கள் நிம்மதியடைவர்.
பொள்ளாச்சியில், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளன. பஸ் ஸ்டாண்ட்களை இணைக்கும் சுரங்கபாதை, பஸ் ஸ்டாண்ட் முகப்பு பகுதி, பயணியர் அமரும் இருக்கை என அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில், பழைய பஸ் ஸ்டாண்டில், பஸ் நிறுத்தப்பகுதியையும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இது குறித்து, கடந்த, 20ம் தேதி, 'தினமலர்' நாளிதழில், 'இதென்ன பஸ் ஸ்டாண்டா, கடை தெருவா' என்ற தலைப்பில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக, பழைய பஸ் ஸ்டாண்ட் பஸ் நிறுத்தப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
இதுபோன்ற மற்ற ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் நிம்மதியடைவர். போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது போன்று, மக்கள் அமரும் இடம், பஸ் ஸ்டாண்ட் முகப்பு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். இதனால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்,' என்றனர்.

