/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அக்னிவீர் வாயு' தேர்வு: இளைஞர்களுக்கு அழைப்பு
/
'அக்னிவீர் வாயு' தேர்வு: இளைஞர்களுக்கு அழைப்பு
ADDED : ஜன 23, 2024 01:47 AM
கோவை:இந்திய ராணுவத்தால், 'அக்னிவீர் வாயு' தேர்வு நடத்தப்பட உள்ளது. வரும் பிப்., 6க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இடைநிலை, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் அல்லது மூன்றாண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு அல்லது தொழில் அல்லாத பாடத்துடன், இரண்டு ஆண்டு தொழிற்கல்வி படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் மற்றும் ஆங்கிலத்தில், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
2004 ஜன., 2 முதல் 2007 ஜூலை, 2க்குள் பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். இத்தகுதியுடைய திருமணமாகாத ஆண் மற்றும் பெண்கள், இத்தேர்வுக்கு, https://agnipathvayu.cdac.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள், மேற்கண்ட இணைய தளத்தில் உள்ளது. வரும் மார்ச் 17ல் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும்.
நமது நாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்ய விரும்பும், தகுதி பெற்ற, கோவை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து பயனடைய, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

