/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலகளாவிய தரத்தில் கேம்பிரிட்ஜ் கல்வி முறை
/
உலகளாவிய தரத்தில் கேம்பிரிட்ஜ் கல்வி முறை
ADDED : ஜன 20, 2024 08:22 PM

கோவை;ஜி.ஆர்.ஜி., கல்விக்குழுமத்தின் கீழ், ஜி.ஆர்.ஜி., மார்டன் ஸ்காலர்ஸ் -கேம்பிரிட்ஜ் சர்வதேச பள்ளி வரும் கல்வியாண்டு முதல் (2024-25) புதிதாக துவங்கப்படவுள்ளது.
பள்ளி முதல்வர் உமா கூறியதாவது:
கொடிசியா பின்புறம், டெக்பார்க் சாலையில், ஜி.ஆர்.ஜி., மார்டன் ஸ்காலர்ஸ் பள்ளி செயல்படுகிறது. எதிர்வரும் கல்வியாண்டில், மூன்று வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு, மழலையர் வகுப்புகள், ஐந்து வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு ஆரம்ப மற்றும் 11 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு நடுநிலை வகுப்புகளில் சேர்க்கை வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து, ஒன்பது, பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகள் துவங்க திட்டமிட்டுள்ளோம். கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடத்திட்டம் மாணவர்களை எதிர்கால உலகில் அனைத்து வித சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் மேம்படுத்தும். உலகளாவிய சிந்தனை வளர்க்கும் வகையில் கல்வி சூழல் அமைத்து கொடுக்கப்படுகிறது. ஆங்கிலம், தமிழ் மட்டுமின்றி பிரெஞ்ச், ஜெர்மனி, ஸ்பேனிஷ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ள இயலும்.
மாணவர்கள் சேர்க்கை குறித்த தகவல்களுக்கு 74180-96663.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

