/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ காப்பீட்டு திட்டம் :வரும் 4ல் மீண்டும் முகாம்
/
மருத்துவ காப்பீட்டு திட்டம் :வரும் 4ல் மீண்டும் முகாம்
மருத்துவ காப்பீட்டு திட்டம் :வரும் 4ல் மீண்டும் முகாம்
மருத்துவ காப்பீட்டு திட்டம் :வரும் 4ல் மீண்டும் முகாம்
ADDED : பிப் 02, 2024 12:14 AM
வால்பாறை:முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக, வால்பாறையில் வரும், 4ம் தேதி மீண்டும் முகாம் நடக்கிறது.
வால்பாறையில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட சிறப்பு முகாம், கடந்த மாதம், 20, 21 மற்றும் 28 ஆகிய நாட்களில் மூன்று கட்டமாக நடந்தது. வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில் வசிக்கும் மக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் கடந்த மாதம் நடந்த மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில், 2,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், 4ம் தேதி மீண்டும் சிறப்பு முகாம் நடக்கிறது.
வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடக்கும் முகாமில் கலந்து கொள்பவர்கள் ரேஷன் கார்டு, வருமான சான்றிதழ், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் அட்டைகளின் நகல்கள் கொண்டு வர வேண்டும்,' என்றனர்.