/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியினருக்கான முகாம்; 67 விண்ணப்பங்களுக்கு தீர்வு
/
பழங்குடியினருக்கான முகாம்; 67 விண்ணப்பங்களுக்கு தீர்வு
பழங்குடியினருக்கான முகாம்; 67 விண்ணப்பங்களுக்கு தீர்வு
பழங்குடியினருக்கான முகாம்; 67 விண்ணப்பங்களுக்கு தீர்வு
ADDED : ஜூன் 24, 2025 10:45 PM
பெ.நா.பாளையம்; ஆனைகட்டியில் நடந்த பழங்குடியினருக்கான சிறப்பு முகாமின், முதல் நாளில், 67 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டன.
தொல்குடி திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகட்டி கே.கே. நகரில் உள்ள சமுதாய கூடத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நடந்தது.
இதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, 6 பேர் தனிப்பட்டா ஒரு நபர், இலவச வீட்டு மனை பட்டா, 6 பேர், கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 6 பேர், ஜாதி சான்று, 9 பேர், இருப்பிடச் சான்று ஒரு நபர், வருமானச் சான்று ஒரு நபர், நில அளவை ஒரு நபர், பட்டா மாறுதல், 4 பேர் என மொத்தம், 35 மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டன.
இதே போல குடிமை பொருள் விண்ணப்பங்களில் ரேஷன் கார்டில் மொபைல் போன் எண் இணைப்பு, 17 பேர், முகவரி மாற்றம், 4 பேர், புதிய உறுப்பினர் சேர்க்கை, 4 பேர் உறுப்பினர் நீக்கம், 4 பேர், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், 3 பேர் என மொத்தம், 32 பேருக்கான விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டன.
நிகழ்ச்சியில், வீரபாண்டி ஊராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி, மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.