
செய்முறை
காரட்டை தோல் நீக்கி, மிக்சியில் சேர்த்து அரைக்க வேண்டும். பின், நன்றாக வடி கட்டி, கேரட் சாற்றை எடுத்து கொள்ள வேண்டும். காரட் சாற்றுடன், நான்கு ஸ்பூன் சோள மாவை சேர்த்து கலக்க வேண்டும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு அதில், முந்திரிபருப்பு, பாதம், பிஸ்தா, உலர் திராட்சை சேர்த்து மிதமான தீயில் வைத்து, வறுக்க வேண்டும்.
நன்றாக வறுத்த நட்ஸ்களை, வேறு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். பின்னர் அதே பாத்திரத்தில் சோளமாவு கலந்த, கேரட் ஜூஸை மீண்டும் ஒரு முறை ஜல்லடையில் வடித்து சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும். கைவிடாமல், இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு கிளற வேண்டும். கேரட் கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் இரண்டு கப் சர்க்கரையை சேர்த்து கலந்து விட வேண்டும்.
அவ்வப்போது தேவையான நெய்யை ஊற்றி மேலும் இரண்டு நிமிடங்கள் கலந்து கொண்டே இருக்க வேண்டும். இதனுடன், தட்டிய இரண்டு ஏலக்காய், ஒரு ஸ்பூன் ரோஸ் எசன்ஸை சேர்க்க வேண்டும்.
மேலும், ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். இதனுடன், வறுத்து எடுத்த நட்ஸ்களை சேர்த்துக்கொள்ளலாம். தேவையான அளவு நெய்யை தாராளமாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அல்வா நெய் பிரிந்து பக்குவத்திற்கு வரும் போது இறங்கி விடலாம். நன்றாக ஆற விட்டு சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.

