ADDED : பிப் 02, 2024 12:06 AM

இந்த பட்ஜெட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு, 300 யூனிட் சூரிய ஒளி மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்ட வங்கி கடன் வழங்குவதாகவும், மின்சார பஸ் மற்றும் வாகனங்களை அதிகம் அறிமுகம் செய்ய போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று விஷயங்கள் வரவேற்க தக்க அம்சங்களாகும்.
ரவீந்திரன் ( செயலாளர் 'ராக்' அமைப்பு)
இந்த பட்ஜெட்டில், 40 ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகளை வந்தே பாரத் பெட்டிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என, சொல்லப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளது. 2.55 லட்சம் கோடி ரூபாய் ரயில்வேயின் முக்கிய செலவுகளுக்காக ஒதுக்கி உள்ளனர். மூன்று ரயில்வே புதிய வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் மற்றும் நமோ பாரத் ரயில்கள் பெரும்பாலான நகரங்களுக்கு கொண்டு வரப்படும் என, ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். உண்மையில் ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு உதவும் நல்ல பட்ஜெட்டாக உள்ளது.
ஜெ.சதீஸ் (இயக்குனர் கொங்கு குளோபல் போரம்)

