/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.,ல் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்
/
கே.எம்.சி.எச்.,ல் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்
கே.எம்.சி.எச்.,ல் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்
கே.எம்.சி.எச்.,ல் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்
ADDED : ஜன 24, 2024 01:32 AM
கோவை;கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கே.எம்.சி.எச்., மருத்துவமனையில், கருப்பை வாய் பரிசோதனை முகாம் நடக்கிறது.
வரும், பிப்., 17ம் தேதி வரை நடக்கும் முகாமில், சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள் செய்யப்படும். இலவசமாக நிபுணர் ஆலோசனை வழங்கப்படும்.
கருப்பை வாய் புற்றுநோயை கண்டறியும், எச்.பி.வி., மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் குறைந்த கட்டணத்தில் பெறலாம்.
முகாமில், 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம். விபரங்கள் அறிய, 87548 87568 என்ற எண்ணில் அழைக்கலாம்.
கே.எம்.சி.எச்., மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், ''பரிசோதனைகள் மற்றும் தகுந்த சிகிச்சை மூலம் வைரஸ் தொற்றை குணப்படுத்தி, கருப்பை வாய் புற்றுநோயை தடுக்கலாம். சீரற்ற அல்லது அதிகமான மாதவிடாய் ரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு, காரணம் தெரியாத எடை இழப்பு, அடிவயிற்றில் தொடர்ந்து வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள், கண்டிப்பாக இம்முகாமில் கலந்துகொள்ள வேண்டும்,'' என்றார்.

