/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களுடன் முதல்வர் திட்டம் :மனுக்களுக்கு உடனடி தீர்வு
/
மக்களுடன் முதல்வர் திட்டம் :மனுக்களுக்கு உடனடி தீர்வு
மக்களுடன் முதல்வர் திட்டம் :மனுக்களுக்கு உடனடி தீர்வு
மக்களுடன் முதல்வர் திட்டம் :மனுக்களுக்கு உடனடி தீர்வு
ADDED : ஜன 09, 2024 10:50 PM
வால்பாறை;மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், இரண்டாயிரம் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் வாயிலாக, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுகள் பெறும் திட்டத்தின் கீழ், வால்பாறை தாலுகாவில் கடந்த 2ம் தேதி துவங்கிய முகாம் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு, 6ம் தேதி வரை ஐந்து கட்டமாக நடந்தது.
முகாமில், மகளிர் உரிமைத்தொகை, ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனைப்பட்டா, கல்வி உதவித்தொகை, ரோடு, வீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள் மனு கொடுத்தனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில் ஐந்து கட்டமாக நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், 4,204 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், இரண்டாயிரம் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்,' என்றனர்.

