/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகள் பலியான விவகாரம்: மருந்து நிறுவனங்களில் ஆய்வு
/
குழந்தைகள் பலியான விவகாரம்: மருந்து நிறுவனங்களில் ஆய்வு
குழந்தைகள் பலியான விவகாரம்: மருந்து நிறுவனங்களில் ஆய்வு
குழந்தைகள் பலியான விவகாரம்: மருந்து நிறுவனங்களில் ஆய்வு
ADDED : அக் 20, 2025 11:01 PM
கோவை: கோவை மண்டலத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களில், மண்டல மருந்து கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் இறந்ததை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களை, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களில், ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
கோவை மண்டலத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் மருந்துகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யும் இடங்கள், பதிவேடு பராமரிப்பு, தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து கூறுகையில், ''கோவை மண்டலத்தில், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. மூன்று நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பேட்ச் தயாரிக்கும் போதும், அதை பரிசோதனை செய்து உறுதி செய்த பின்னரே, விற்பனைக்கு வெளியில் அனுப்ப வேண்டும் என, அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், '' என்றார்.

