/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணி மாறுதல் அளிக்க வேண்டிய குழந்தைகள் காப்பக பணியாளர்கள்
/
பணி மாறுதல் அளிக்க வேண்டிய குழந்தைகள் காப்பக பணியாளர்கள்
பணி மாறுதல் அளிக்க வேண்டிய குழந்தைகள் காப்பக பணியாளர்கள்
பணி மாறுதல் அளிக்க வேண்டிய குழந்தைகள் காப்பக பணியாளர்கள்
ADDED : ஜூன் 24, 2025 11:16 PM
கோவை; குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், செயல்படும் அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பணி மாறுதல் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 30 அரசு குழந்தைகள் காப்பகங்களும், 13 கூர்நோக்கு இல்லங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு, 15 ஆண்டுகள் ஆன பிறகும், பணி மாறுதல் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை.
குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள், குழந்தைகள் இருக்கும் நேரத்தில் நேரடியாக ஆய்வு செய்யாமல், கோப்புகளை மட்டுமே பரிசீலித்து வருவதால், குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், வெளியே தெரியாமல் போகும் நிலை உருவாகியுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெரும்பாலான பணியாளர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படுவதில்லை. ஒரே இடத்தில் நீண்ட காலம் பணிபுரிவதால், வேலையில் அலட்சியப் போக்கு காணப்படுகிறது.
அங்கு உருவாகும் சூழ்நிலைகளை முறையாக கையாள முடியாத நிலை ஏற்படுகிறது. காப்பகங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிகளில், கல்வி பயிலச் சென்றுவிடுவதால், காப்பகங்களில் நேரடியாக கல்வி வழங்கும் பணி குறைந்து வருகிறது' என தெரிவித்தார்.