/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோமாளிகளின்' கும்மாளத்தால் குழந்தைகள் சிரிப்போ சிரிப்பு!
/
'கோமாளிகளின்' கும்மாளத்தால் குழந்தைகள் சிரிப்போ சிரிப்பு!
'கோமாளிகளின்' கும்மாளத்தால் குழந்தைகள் சிரிப்போ சிரிப்பு!
'கோமாளிகளின்' கும்மாளத்தால் குழந்தைகள் சிரிப்போ சிரிப்பு!
ADDED : ஜன 13, 2024 11:10 PM

கோவை புரோசோன் மாலில், சர்வதேச அளவில் புகழ் பெற்ற கிளவுன் கலைஞர்களின் நகைச்சுவை, நடனம், மேஜிக், அக்ரோபேட்ஸ், யுனி சைக்கிளிங் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் உட்பட அனைவரும், சிரித்து சிரித்து ஒரு வழியாகிப்போயினர்!
கோவை சத்தி ரோட்டில் உள்ள புரோசோன் மாலில், நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, பெரு, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
ரெட்நோஸஸ், பிக் டீயர்ஸ் குழுவினர் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வில், பங்கேற்ற கிளவுன் கலைஞர்கள், குழந்தைகளுக்கு சிரிப்பூட்டி கலகலக்க வைத்தனர்.
இன்றைய நிகழ்வு மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது. 100 நிமிடங்கள் நடக்கும் நிகழ்ச்சி, மாலை 5:00 மணி, இரவு 7:00 மணி என மூன்று காட்சிகளாக நடக்கிறது.
மேஜிக் ஷோ, மைம், மியூசிக், அக்ரோபெட்ஸ், யூனி சைக்கிளிங் நிகழ்வுகள் நடக்கின்றன. பொதுமக்களை சிரிக்க வைத்து, மகிழ்விக்க உள்ளனர்.
நுழைவு கட்டணமாக, 199 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவியர் குழுவாக வரும்போது 99 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்.
டிக்கெட்டுகளை, புரோசோன் வணிக வளாகத்திலும், ஸ்போர்பி இணையதளத்திலும் பெறலாம். நிகழ்ச்சியில், மீடியா பார்ட்னராக 'தினமலர்' நாளிதழும், இணை பார்ட்னராக சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளியும் இணைந்துள்ளன.
குழந்தைகளுடன் இணைந்து சிரித்து மகிழ வேண்டிய இந்நிகழ்ச்சி, இன்றோடு நிறைவு பெறுகிறது. வாங்க நேர்ல சந்திப்போம்!

