ADDED : மார் 25, 2025 11:12 PM
வழிப்பறி செய்தவர் கைது
ஒடிசாவை சேர்ந்தவர் ராஜ்குமார், 38; கூலித்தொழிலாளி. இவர் கடந்த 24ம் தேதி லங்கா கார்னர் பகுதியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், ராஜ்குமாரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 400 பறித்துச் சென்றார். ராஜ்குமார் உக்கடம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செந்தில், 42 என்பது தெரியவந்தது. போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தவறி விழுந்து லோடு மேன் பலி
கேரளம், கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ், 57. இவர் கீரணத்தத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில், லோடு மேனாக பணியாற்றி வந்தார். கடந்த 23ம் தேதி இரவு, கோவை ரயில்வே ஸ்டேஷனில், இரும்பு ராடு இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, லாரியில் இருந்து கீழே இறங்க முயன்ற போது, தவறி விழுந்ததில் அவரின் நெற்றி, காது பகுதிகளில் காயம்பட்டது. அவரை மீட்டு, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
கள் விற்றவர் கைது
மாநகரில் கள் விற்பனையை தடுக்க, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கோவை, இருகூர், ஏ.ஜி.புதுார் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், சோதனை நடத்திய போது. அங்கு கள் விற்பனை செய்வது தெரியவந்தது. கள் விற்பனை செய்த இருகூரை சேர்ந்த நடராஜன், 57 என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த 6 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.