sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 06, 2026 ,சித்திரை 23, வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேங்காய் எண்ணெய், மிளகு விலை உயர்வு  துவரம் பருப்பு, பூண்டு விலை குறைந்தது 

/

தேங்காய் எண்ணெய், மிளகு விலை உயர்வு  துவரம் பருப்பு, பூண்டு விலை குறைந்தது 

தேங்காய் எண்ணெய், மிளகு விலை உயர்வு  துவரம் பருப்பு, பூண்டு விலை குறைந்தது 

தேங்காய் எண்ணெய், மிளகு விலை உயர்வு  துவரம் பருப்பு, பூண்டு விலை குறைந்தது 


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மளிகை பொருட்கள் வரத்து துவங்கியுள்ளதால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது. அதே சமயம், விளைச்சல் குறைவால் தேங்காய் எண்ணெய், மிளகு போன்றவற்றின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

பொதுவாக மளிகை பொருட்கள், காய்கறி போன்றவற்றின் விலை உயர்வு, மக்களின் பொருளாதார செயல்பாடுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த டிச., ஜன., மாதம் வரை, அனைத்து மளிகை பொருட்களின் விலையும், அதிகரித்து காணப்பட்டது.

தற்போது மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, மளிகை பொருட்கள் வரத்து பிப்., முதல் துவங்கியுள்ளது. வரத்து துவங்கியுள்ளதால் விலை குறைந்துள்ளது.

கோவை மாவட்ட மளிகை பொருட்கள் வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் கூறுகையில், ''வரத்து துவங்கியுள்ளதால், பெரும்பாலான பொருட்கள் விலை குறைந்து உள்ளது. விளைச்சல் குறைவால் தேங்காய், மிளகு விலை அதிகரித்துள்ளது. தேங்காய் விளைச்சல் குறைவால், தேங்காய் எண்ணெய் 290 ரூபாய்க்கு விற்கிறது.

மிளகு 720 ரூபாயிலிருந்து 820 ரூபாய்க்கு அதிகரித்துள்ளது. சீரக சம்பா அரிசி கிலோ 90 லிருந்து 100 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.

சில்லரை விற்பனையில் இவ்விலைகள், 20 சதவீதம் அதிகம்,' என்றார்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்




    • Dinamalar Events


    Dinamalar