ADDED : ஜன 24, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ராகுல் பாரத் நியாய யாத்திரை சென்ற போது, அசாமில் கலவரம் செய்ததை கண்டித்து, கோவை பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை மாநகர் மாவட்ட காங்., கமிட்டி தலைவர் கருப்புசாமி தலைமை வைத்தார். ஆர்ப்பாட்டத்தில், 100 க்கும் மேற்பட்ட காங்., தொண்டர்கள் பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சங்கர், காங்., நிர்வாகி கணபதி சிவகுமார், ராஜாமணி, போஸ், தமிழ்ச்செல்வன், காந்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

