/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடருது 'பிளாஸ்டிக்' புழக்கம் எச்சரிக்கை மட்டும் போதுமா? சீல்' வைக்க ஏனோ தயக்கம்
/
தொடருது 'பிளாஸ்டிக்' புழக்கம் எச்சரிக்கை மட்டும் போதுமா? சீல்' வைக்க ஏனோ தயக்கம்
தொடருது 'பிளாஸ்டிக்' புழக்கம் எச்சரிக்கை மட்டும் போதுமா? சீல்' வைக்க ஏனோ தயக்கம்
தொடருது 'பிளாஸ்டிக்' புழக்கம் எச்சரிக்கை மட்டும் போதுமா? சீல்' வைக்க ஏனோ தயக்கம்
UPDATED : பிப் 02, 2024 02:01 AM
ADDED : பிப் 01, 2024 11:25 PM

கோவை:'சீல்' நடவடிக்கை பாயும் என எச்சரித்த கடந்த மாதத்திலேயே, 569.250 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மாநகராட்சி மீதான பயமின்மையை காட்டுகிறது.வெறும்எச்சரிக்கை மட்டுமின்றி நடவடிக்கையும் தேவை என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த, 2022 ஜூலை 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவையில் இதன் புழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து நுழையும் இந்த வகை பிளாஸ்டிக், கடைகளுக்கு 'டோர் டெலிவரி' செய்யப்படுகிறது.
இதை தடுக்க சுகாதார பிரிவினர், இதற்கென அமைக்கப்பட்ட தனிக்குழுவினர்பறிமுதல் செய்து அபராத நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் இப்பொருட்களை தடுக்க சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு ரூ.100 முதல் பெரிய வணிக நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் வரை அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மட்டும், 10 ஆயிரத்து, 957 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.24 லட்சத்து, 57 ஆயிரத்து, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன் புழக்கத்தை கட்டுப்படுத்த, 'சீல்' வைப்பு நடவடிக்கை பாயும் என,கடந்த மாதம் மாநகராட்சி எச்சரிக்கைவிடுத்தது.
அறிவித்த அதேமாதத்தில், 569.250 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6 லட்சத்து 76 ஆயிரத்து 950 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில், 78.4 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.28 ஆயிரத்து 800 அபராதமும், மேற்கில், 35 கிலோ பறிமுதல் செய்து ரூ.43 ஆயிரத்து 100அபராதமும், வடக்கில், 54.75 கிலோ பறிமுதல் செய்துரூ.46 ஆயிரத்து 700 அபராதமும் வசூலிக்கப்பட்டது.
தெற்கில், 54.65 கிலோ பறிமுதல் செய்துரூ.35 ஆயிரத்து 350 அபராதமும், அதிகபட்சமாக மத்திய மண்டலத்தில், 111 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.66 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, பிளாஸ்டிக் தடுப்பு குழுவினர், 233.450 கிலோ பறிமுதல் செய்து ரூ.45 ஆயிரத்து, 6,900 அபராதம் வசூலித்துள்ளனர்.
இப்படியிருக்க 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்த மாநகராட்சி நிர்வாகம் இதுவரை அந்நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. வெறுமனே எச்சரிக்கை மட்டுமின்றி அதை நடைமுறைப்படுத்தினால்ஒழிய இந்த வகைபிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாது என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

