/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோளம் விதை பண்ணை; வேளாண் அதிகாரிகள் ஆய்வு
/
சோளம் விதை பண்ணை; வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூன் 24, 2025 10:43 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம் குப்பிச்சிபாளையத்தில் உள்ள சோளம் விதை பண்ணையை கோவை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் கிராமத்தில் குறுகிய காலத்தில் கூடுதல் மகசூல் தரும் சோளம் கே. 12 ரகம் பயிரிடப்பட்டுள்ளது. இது, 95 முதல், 100 நாட்கள் வரையிலான குறுகிய கால பயிராகும்.
மானாவாரி, இறவை இரண்டு வகை சாகுபடிகளுக்கும் ஏற்றது. மற்ற சோள ரகங்களை விட, 31 சதவீதம் கூடுதல் மகசூல் தரவல்லது. இந்த சோளத்தை தானியத்துக்கும், தட்டுக்களுக்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக, கால்நடைகளுக்கு நல்ல தீவனமாக இருக்கும். பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் உள்ளது. கே, 8 ரகத்துக்கு மாற்றாக இந்த ரகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், மானாவாரி வேளாண்மையில் ஒரு ஏக்கருக்கு, 3000 முதல், 3 ஆயிரத்து, 200 கிலோ எடையுள்ள சோளமும், இறவையில், 5,500 முதல், 5,800 கிலோ மகசூலும் கிடைக்கும். சோளத்தட்டு ஒரு ஏக்கருக்கு, 12 டன் வரை கிடைக்கும்.
இந்த விதை பண்ணையை கோவை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் விஜய கல்பனா, வேளாண்மை துணை அலுவலர் விஜயகோபால் மற்றும் சந்திரசேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.