/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிரைம் செய்திகள்: பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது
/
கிரைம் செய்திகள்: பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது
கிரைம் செய்திகள்: பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது
கிரைம் செய்திகள்: பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது
ADDED : அக் 20, 2025 09:56 PM
பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது அன்னூர் போலீஸ் எஸ்.ஐ., அழகேசன் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் கிராமங்களில் சோதனை நடத்தினர்.
இதில் பசூரில், ராயல் ரெஸ்டாரன்ட் அருகே பொது இடத்தில் மது அருந்திய குருக்கம்பாளையத்தை சேர்ந்த கணேசன், 25. மூல குரும்பபாளையத்தை சேர்ந்த பழனி முருகன், 28, ஆகிய இருவரும் பிடிபட்டனர். இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
செல்போன் திருடியவர் கைது மேட்டுப்பாளையம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித், 19. இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஊட்டி ரேக்கில் ஊட்டி செல்லும் பஸ்சில் ஏறிய போது, கூட்டம் நெரிசலில் ரஞ்சித் குமார் உடன் ஏறிய ஒரு நபர், அவருடைய பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்மார்ட் போன் ஒன்றை திருடிவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடினார். ரஞ்சித் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் அவரை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அரவிந்தன், 24, கூலி தொழிலாளி என தெரியவந்தது. ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரவிந்தனை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.

