/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரம்பிக்குளம் கரையில் ஓய்வு எடுக்கும் முதலை
/
பரம்பிக்குளம் கரையில் ஓய்வு எடுக்கும் முதலை
ADDED : ஜூன் 24, 2025 10:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அடுத்துள்ள, பரம்பிக்குளம் அணையின் கரையில் முதலை ஓய்வு எடுக்கும் போட்டோ, சமூக வலைதளங்களில் வைரலானது.
பொள்ளாச்சி அருகே, பி.ஏ.பி., திட்டத்தில் முக்கிய அணையாக பரம்பிக்குளம் அணை உள்ளது. இந்த அணையில் நீர் தேக்கி, சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையம் வழியாக, திருமூர்த்தி அணைக்கு கொண்டு சென்று பாசனத்துக்கு வழங்கப்படுகிறது.
இந்த அணையில், முதலை உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று அணைக்கரையில் முதலை ஒன்று ஓய்வு எடுத்தது. அசையாமல் படுத்து இருந்த முதலையை சிலர் போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது, அதன் போட்டோ, வீடியோ வைரலாகி உள்ளது.