/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு சீரமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு
/
ரோடு சீரமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு
ADDED : அக் 14, 2025 09:17 PM
வால்பாறை; ரோட்டை சீரமைக்காவிட்டால் வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக 'டான்டீ' உபாசி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வால்பாறையிலிருந்து, 13 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள சின்கோனா (டான்டீ) உபாசி டிவிஷன். இங்குள்ள ரோட்டை சீரமைக்க கோரி இப்பகுதி தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதி தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சின்கோனா (டான்டீ) உபாசி ரோட்டை சீரமைத்துத்தரக்கோரி அதிகாரிகளிடம் பல முறை கூறியும், அலட்சியமாக உள்ளனர். இதனால், வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்தப்பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இரண்டு கி.மீ., துாரம் உள்ள ரோட்டை சீரமைக்க, பத்து ஆண்டுகளாக போராடி வருகிறோம். சட்டசபை தேர்தலுக்கு முன், நகராட்சி சார்பில் ரோடு போடப்பட வேண்டும். இல்லாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை அரசிடம் ஒப்படைத்துவிடுவோம். வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

