/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலைவனமாதல் தடுப்பு தினம் பள்ளியில் விழிப்புணர்வு
/
பாலைவனமாதல் தடுப்பு தினம் பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 19, 2025 07:55 AM

நெகமம் : நெகமம் அரசு பள்ளியில், உலக பாலைவனமாதல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.
நெகமம் அரசு மேல்நிலைப்பள்ளியில், உலக பாலைவனமாதல் தடுப்பு தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் கனகராஜன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ராஜா முன்னிலை வகித்தார்.
பள்ளி வளாகத்தில், ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டு, கூண்டு அமைக்கும் பணியில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், 'உலக பாலைவனமாதல் தினம், ஆண்டுதோறும் ஜூன் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான சர்வதேச முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பாலைவனமாதல் தடுப்பது குறித்தும், மரக்கன்றுகள் நடுதல், இயற்கை வளம் பாதுகாப்பு குறித்தும் மாணவர்களிடம் விளக்கப்பட்டது,' என்றனர்.