/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டை கோவையில் பக்தர்கள் 'ஜெய் ராம் ஸ்ரீராம்'
/
அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டை கோவையில் பக்தர்கள் 'ஜெய் ராம் ஸ்ரீராம்'
அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டை கோவையில் பக்தர்கள் 'ஜெய் ராம் ஸ்ரீராம்'
அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டை கோவையில் பக்தர்கள் 'ஜெய் ராம் ஸ்ரீராம்'
ADDED : ஜன 23, 2024 01:41 AM
கோவை:அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவையின் பல்வேறு கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ராமர் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தியில், ராமர் பிராண பிரதிஷ்டை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். கோவை ராம்நகரிலுள்ள கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், மிகப்பெரும் வைபவமாக கும்பாபிேஷக விழா கொண்டாடப்பட்டது.
அதன்படி, நேற்று காலை 6:00 மணிக்கு பூபாள ராகத்தில் மங்களவாத்தியத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. காலை, 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவாகாலம் கோஷ்டி சார்பில் நடத்தப்பட்டது.
காலை 8:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், காலை, 9:00 மணிக்கு ராம்நகர் பஜனை கோஷ்டியினரின் ராமநாமசங்கீர்த்தனமும் நடந்தன.
காலை, 10:00 மணிக்கு நாமபஜன் மண்டலியினரின் ராமநாம சங்கீர்த்தனம், காலை, 12:00 மணிக்கு ராமர் கோவில் வளாகத்திலுள்ள அபிநவவித்யா தீர்த்த மண்டபத்தில் சீதாராமர் திருக்கல்யாண மஹோற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் திருக்கல்யாண மஹோற்சவத்தை கண்டனர்.
மதியம், 1:00 மணிக்கு பிரசாத வினியோகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஸ்ரீ கார்த்தி ஞானேஸ்வர் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும், 5:00 மணிக்கு வேதபண்டிதர்களின் வேதகோஷ முழக்கமும் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு கோவில் மகாமண்டபத்தில், தர்மதீபம் ஏற்றி வைக்கப்பட்டது. 2,008 விளக்குகளை, கோவில் சுற்றுப்பிரகாரத்தில் பக்தர்கள் ஏற்றினர்.
மாலை 6:20 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சீதா, லட்சுமண சமேத கோதண்டராமர் உற்சவராக திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ராமர் கோவில் வீதி, சென்குப்தா, ராஜாஜி, சத்தியமூர்த்தி வீதி வழியாக திருவீதி உலா மீண்டும் ராமர் கோவிலை அடைந்தது. மாலை 6:30 மணிக்கு ராமர் சரித்திர நாட்டிய நாடகம், பவித்ரா சீனிவாசன் மற்றும் லாவண்யா சங்கர் குழுவினரால் அரங்கேற்றப்பட்டது.
கோதண்டராமர் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியன், செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

