/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் பதவி நீக்கம்
/
தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் பதவி நீக்கம்
தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் பதவி நீக்கம்
தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் பதவி நீக்கம்
ADDED : ஜன 13, 2024 11:13 PM
கோவை;மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் வாழ்நாள் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வந்த இருவர், தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் முன்னாள் அறங்காவலரும், எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் நிர்வாகக்குழு தலைவருமான கண்ணன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மதுக்கரை மரப்பாலம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோவிலின் வாழ்நாள் பரம்பரை அறங்காவலர்களாக திருமூர்த்தி மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
வாழ்நாள் பரம்பரை அறங்காவலர் என்ற ஒரு பதவியோ, பொறுப்போ அறநிலையத்துறையில் இல்லாதது குறித்து, கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனரிடம் புகார் செய்தேன்.
புகாரின் பேரில் ஐந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் தொடர் விசாரணை மற்றும் ஆய்வு, ஆதாரங்களை திரட்டி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதின் விளைவாக, அப்படி ஒரு பொறுப்போ பதவியோ இல்லை என்று தெரியவந்தது.
அதன் அடிப்படையில், வாழ்நாள் பரம்பரை அறங்காவலர்களாக இருந்த திருமூர்த்தி மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய இருவரையும் தற்காலிகமாக, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ் நீக்கம் செய்துள்ளார்.
அதே சமயம், தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ,28 ஏக்கர் 46 சென்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார், 125 கோடி ரூபாய். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை பாராட்டுக்குரியது.
இவ்வாறு, அவர் கூறினார்.

