/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் 'டிவைடர்' வைத்து இடையூறு
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் 'டிவைடர்' வைத்து இடையூறு
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் 'டிவைடர்' வைத்து இடையூறு
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் 'டிவைடர்' வைத்து இடையூறு
ADDED : மார் 25, 2025 10:10 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி வழித்தடங்களில், வாகன போக்குவரத்து அதிகரிப்பால், நெரிசல் ஏற்படுகிறது. கோவை ரோடு, வால்பாறை ரோடு உள்ளிட்ட வழித்தடங்கள் அகலமான ரோடாக இருந்தாலும், வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.
பஸ் ஸ்டாப்புகளிலும் குழப்பம் நிலவுகிறது. பல இடங்களில், சந்திப்பு ரோடுகள் ஒட்டியே ஸ்டாப் இருப்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதேபோல, ரோட்டோர ஆக்கிரமிப்பும், போக்குவரத்து விதிமீறலும் தொடர்கிறது.
ஆக்கிரமிப்பை அகற்றவும், போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கவும் துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் அரசியல் கட்சியினர் தலையீடும் அதிகரிக்கிறது. இவ்வாறு இருக்கையில், சூளேஸ்வரன்பட்டியில், தங்கம் தியேட்டர், மோதிராபுரம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் 'டிவைடர்' வைக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'இவ்வழித்தடத்தில், கடைகள் அனைத்தும், ரோடு வரை விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. கடைக்கும் 'பார்க்கிங்' வசதி கிடையாது. இதனால், ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர்.இந்நிலையில், சூளேஸ்வரன்பட்டி பகுதியில், ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்குள், மூன்று பகுதிகளில், டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதற்கு தீர்வு காண, விதிமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.