/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட தடகள போட்டி; நேரு ஸ்டேடியத்தில் ஆரவாரம்
/
மாவட்ட தடகள போட்டி; நேரு ஸ்டேடியத்தில் ஆரவாரம்
ADDED : ஜன 19, 2024 04:17 AM

கோவை : மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப்போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
கோவை மாவட்ட தடகள சங்கம், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் லெஜன்ட் சார்பில் 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கான மாவட்ட தடகளப்போட்டிகள் நேற்று நடந்தன. குஜராத் மாநிலத்தில் பிப்., மாதம் நடக்கவுள்ள தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்கும் கோவை மாவட்ட அணிக்கான வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்யும் வகையில் நடந்த இப்போட்டியில் 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இப்போட்டியில், 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 3000மீ., உயரம் தாண்டுதல், நீளம்தாண்டுதல், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
நேற்று நடந்த போட்டி முடிவுகள்:
16 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான உயரம் தாண்டுதலில், அக்சரா, ஹரினி, பரணி; 80மீ., தடை ஓட்டத்தில் அபிநயா, ஜெலினா, சஞ்சிதா; 600மீ., ஓட்டத்தில், ஹர்சினி, தர்சினி, பிரகல்யா; நீளம் தாண்டுதலில் ஜெலிவா, சிவானி, அப்சரா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

