sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காலை 11:00 - 3:00 மணி வரை வெளியே சுத்தாதீங்க! உக்கிரமடைகிறது வெயில்; ரொம்ப கவனமாக இருங்க

/

காலை 11:00 - 3:00 மணி வரை வெளியே சுத்தாதீங்க! உக்கிரமடைகிறது வெயில்; ரொம்ப கவனமாக இருங்க

காலை 11:00 - 3:00 மணி வரை வெளியே சுத்தாதீங்க! உக்கிரமடைகிறது வெயில்; ரொம்ப கவனமாக இருங்க

காலை 11:00 - 3:00 மணி வரை வெளியே சுத்தாதீங்க! உக்கிரமடைகிறது வெயில்; ரொம்ப கவனமாக இருங்க


ADDED : மார் 25, 2025 11:16 PM

Google News

ADDED : மார் 25, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோடை காலத்தில் வெப்பத்தாக்கத்தில் இருந்து, பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

செய்ய வேண்டியவை


* வெயில் நேரத்தில் வெளியே செல்ல நேர்ந்தால், தொப்பி அணிந்து கொள்ளுங்கள் அல்லது குடை பிடித்துச் செல்லவும்.

* காலணி, வெளிர் நிறமுடைய தளர்வான பருத்தி ஆடை அணிய வேண்டும்.

* தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும்.

* தாகம் எடுக்காவிட்டாலும் தண்ணீர், இளநீர், மோர் போன்ற பானங்களை அருந்த வேண்டும்.

* நீர்ச்சத்து அதிகமுள்ள தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, வெள்ளரி உட்கொள்ளலாம்.

* எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை, உட்கொள்ள வேண்டும்.

* வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து, காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். மின் விசிறி அல்லது ஏ.சி., பயன்படுத்த வேண்டும்.

* கதவு மற்றும் ஜன்னல்களை, திரைச்சீலைகளால் மூடி வைக்க வேண்டும்.

* குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள், கவனமாக இருக்க வேண்டும்.

* திறந்தவெளியில் செய்யும் வேலைகளை, வெயில் குறைவாக உள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் செய்ய வேண்டும்.

* கடினமான வேலைகளை செய்பவர்கள், சிறு சிறு ஓய்வெடுத்து பணிகளை செய்ய வேண்டும்.

* பொதுமக்கள் கூடுமிடங்களில், பாதுகாப்பான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

* தலைவலி, மயக்கம், வாந்தி போன்ற அறிகுறி ஏற்பட்டால், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி, கோடை காலத்தில் வெயில் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை


* காலை, 11:00 முதல் மாலை, 3:00 வரை வெயிலில் செல்வதை தவிருங்கள்.

* தேநீர், காபி, மது, கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

* வெயில் நேரத்தில் திறந்தவெளியில், விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

* கதவு அடைக்கப்பட்ட வாகனங்களில், வெப்ப நிலை அபாயகரமாக உயரும். குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டுச் செல்லக் கூடாது.






      Dinamalar
      Follow us